என் மேகம் ???

Friday, September 10, 2010

கதைகள்

காரணக் கதைகள்
சிரிப்பாணிக் கதைகள்
நீதிக் கதைகள்
புதிர்க் கதைகள்
பட்சிக் கதைகள்
விலங்கு கதைகள்
மண்ணின் கதைகள்
மக்கள் கதைகள்
உறவுக் கதைகள்
பிரிவுக் கதைகள்
கோயில் கதைகள்
கோவின் கதைகள்
நாடோடிக் கதைகள்
நாட்டின் கதைகள்
பூக்களின் கதைகள்
பூவையர் கதைகள்

பேனாவின் நுனியில்
அடங்கிடும்
எழுதப் பட்ட கதைகள்

நாவின் நுனியில்
அடங்கிடும்
சொல்லப்பட்ட கதைகள்

காற்றைப் போல்
உலகை நிறைத்து
உலவிக் கொண்டிருக்கும்
சொல்லப்படாத கதைகள்...

8 comments:

பின்னோக்கி said...

கூடிய விரைவில் சினிமா எடுப்பவர்கள் உங்களிடம் கதை கேட்க வருவார்கள். நீங்கள் தான் நிறைய கதைகள் இருப்பதாக சொல்லியிருக்கிறீர்களே :).

அப்புறம், தமிழிஷ்ல் சேர்த்தேன். என் பெயரில் வந்துவிட்டது. மன்னிக்கவும்.

Chitra said...

காற்றைப் போல்
உலகை நிறைத்து
உலவிக் கொண்டிருக்கும்
சொல்லப்படாத கதைகள்...


......அப்படி சொல்லுங்க.... அருமை!

ராமலக்ஷ்மி said...

//பேனாவின் நுனியில்
அடங்கிடும்
எழுதப் பட்ட கதைகள்

நாவின் நுனியில்
அடங்கிடும்
சொல்லப்பட்ட கதைகள்

காற்றைப் போல்
உலகை நிறைத்து
உலவிக் கொண்டிருக்கும்
சொல்லப்படாத கதைகள்...//

ஆமாம் அமுதா. அருமையான கவிதை.

velji said...

சொல்லப்படாத கதைகள் சொல்ல முடியாத கதைகளாகவும் இருக்கும்!

அருமை!

Unknown said...

எத்தனை வாட்டி காப்பி பேஸ்ட் செய்திருக்கீங்க “கதைகளை” அல்லது தட்டச்சினீர்களா

சொல்லுங்களேன்
உங்கள் ‘கதைகள்’
பற்றிய கதைகளை

ஓ!

அவை
சொல்லப்படாதவைகளில் வருமோ

தமிழ் said...

அருமை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

logu.. said...

\\காற்றைப் போல்
உலகை நிறைத்து
உலவிக் கொண்டிருக்கும்
சொல்லப்படாத கதைகள்... \\mm.. correctthan..