என் மேகம் ???

Tuesday, June 15, 2010

தூக்கம், கடன், இடம்...

தூக்கம்
பொம்மையைத் தாலாட்டி
தூங்க வைக்கிறாள்
சின்னக் குழந்தை..
குழந்தையைத் தூங்கவைக்க
வழியறியாது
விழித்திருக்கிறாள் தாய்...

கடன்
அன்புடன் தான்
கொடுக்கப்பட்டது கடன்
கடனாக மட்டுமே
திருப்பப்பட்ட பொழுது
தொலைக்கப் பட்ட அன்பு
மனதைக் காயப்படுத்தியது...


இடம்
கடந்து செல்லகிறது
வெற்று வாகனம்
அறிந்தவரெனினும்
மனதில் இடமில்லாமல்
வெறுமையால் அடைக்கப்பட்டு
இருக்க இடமின்றி செல்கிறது

10 comments:

அன்புடன் நான் said...

கவிதை அத்தனையும் அருமை.
முதல் இரண்டும் கூடுதல் கவனம் ஈர்க்கிறது.
பாராட்டுக்கள்.

pudugaithendral said...

என்ன சொல்லி பின்னூட்டமிடன்னு தெரியலை. இதயத்தை கணமாக்கின வரிகள்

பின்னோக்கி said...

1,2 அருமை.
3 புரியவில்லை. மீண்டும் படிக்கிறேன்

ராமலக்ஷ்மி said...

மூன்றும் அருமை.

இரண்டும் மூன்றும் ஏற்படுத்திய தாக்கம், தென்றலைப் போல எனக்கும் சொல்லத் தெரியவில்லை.

அடிக்கடி எழுதுங்கள் அமுதா.

எல் கே said...

arumai amutha

Dhiyana said...

அருமை அமுதா. "தூக்க‌ம்" மிக‌வும் பிடித்திருந்த‌து.

தமிழ் அமுதன் said...

முதல் இரண்டும் உங்கள் சிறந்த கவிதைகள் பட்டியலில்...!


அருமை...!அருமை..!

VELU.G said...

மூன்றுமே முத்துக்கள்

sathishsangkavi.blogspot.com said...

கவிதை அருமை....

நட்புடன் ஜமால் said...

மனதில் இடமில்லை :(

மனதில் இடமில்லாமல் காயப்படுத்திய கடன் தூக்கம் இழக்க செய்கிறது