என் மேகம் ???

Monday, November 30, 2009

தீபாவளி நினைவுகள் - தொடர் பதிவு

உழவன் இந்த தொடருக்கு அழைச்சு ரொம்ப நாளாச்சு. கார்த்திகை தீபமேற்றி வேட்டு போடறதுக்கு முன்னாடி பதிவைப் போட்டுடலாம்னு.... வழக்கம் போல் தாமதத்திற்கு மன்னிக்கவும்...

1) உங்களைப் பற்றி சிறுகுறிப்பு?
சிறுகுறிப்பா? வள வளனு பேசுபவளிடம் சிறுகுறிப்பு கேட்டால் எப்படி?

2) தீபாவளி என்ற உடன் உங்கள் நினைவுக்கு வரும் (மறக்க முடியாத) சம்பவம்?
ஆட்டம் பாமை சிரட்டைக்குள் வைத்து வெடித்து சிதறிய சில்லில் வீங்கிப்போன அம்மாவின் முகம்.

3) 2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள்?

சென்னை

4) தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடப்படும் தீபாவளி பற்றி ஒரு சில வரிகள்?
ஊரில் எல்லோரும் சேர்ந்து என்ன பலகாரம் என்று கலந்தாலோசித்து, வாழ்த்துக்கள் பரிமாறி, வாசல் நிறைத்து கோலமிட்டு கோலம் அலங்கோலமாக பட்டாசு வெடித்து என்று எல்லாவற்றையும் மறந்து ... ஓ தீபாவளி... சரி புத்தாடை .. பட்டாசு என்று கடமையாக மாறிவிட்டாற் போல் ஓர் உணர்வு...

5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள்? அல்லது தைத்தீர்களா?
தி.நகரில் கூட்டமில்லாமல் SKC இருந்தது. ஒரு மாலை சென்று எல்லோருக்கும் எடுத்துவிட்டோம்.

6) உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள்? அல்லது வாங்கினீர்கள்?
முறுக்கு, பால்கோவா.

7) உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள்? (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை)

தொலைபேசி , மின்னஞ்சல், குறுஞ்செய்தி

8) தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்து விடுவீர்களா?

இரண்டும் செய்வோம்.

9) இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் பற்றி ஒரு சில வரிகள்? தொண்டு நிறூவனங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வலைத்தளம்?

எங்கள் வீட்டில் எந்த ஒரு நல்ல நாளுமே அருகில் இருக்கும் தொண்டு நிறுவனத்திற்கு உணவு ஸ்பான்சர் செய்வது வழக்கம். இந்த முறை தீபாவளி ஓட்டி CRYக்கு வழங்கினோம்

10) நீங்கள் அழைக்கவிருக்கும் நால்வர், அவர்களின் வலைத்தளங்கள்?
தீபாவளி நினைவுகளைப் பொங்கலுக்கு போடற அளவுக்கு நான் லேட், அதனால் ”ஸ்டாப் த ம்யூஜிக்”

6 comments:

Anonymous said...

//ஆட்டம் பாமை சிரட்டைக்குள் வைத்து வெடித்து சிதறிய சில்லில் வீங்கிப்போன அம்மாவின் முகம்.//

என்ன இவ்வளோ தீவிரவாதியா இருக்கீங்க :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

வள வளனு பேசுபவளிடம் சிறுகுறிப்பு கேட்டால் எப்படி?

:))))))

நல்லவேளை கார்த்திகை தீபம் வந்துச்சு, இல்லனா பதிவு பொங்கலுக்கு தான் ரிலீஸ் ஆகியிருக்கும் போல

தீபத்திருநாள் வாழ்த்துக்கள் அமுதா

pudugaithendral said...

:))))

அ.மு.செய்யது said...

//தீபாவளி நினைவுகளைப் பொங்கலுக்கு போடற அளவுக்கு நான் லேட், அதனால் ”ஸ்டாப் த ம்யூஜிக்” //

:-))))))))))

I like it !!

தமிழ் said...

/1) உங்களைப் பற்றி சிறுகுறிப்பு?
சிறுகுறிப்பா? வள வளனு பேசுபவளிடம் சிறுகுறிப்பு கேட்டால் எப்படி?
/

தங்களைப் பற்றி கட்டுரை வரைக‌

என்னும் கேள்வியைக் கேட்டு இருக்க வேண்டும்.

/10) நீங்கள் அழைக்கவிருக்கும் நால்வர், அவர்களின் வலைத்தளங்கள்?
தீபாவளி நினைவுகளைப் பொங்கலுக்கு போடற அளவுக்கு நான் லேட், அதனால் ”ஸ்டாப் த ம்யூஜிக்” /

:)))))))))

"உழவன்" "Uzhavan" said...

//சிறுகுறிப்பா? வள வளனு பேசுபவளிடம் சிறுகுறிப்பு கேட்டால் எப்படி? //
 
ஆரம்பமே சரவெடிதான். :-)