சின்ன சின்ன கைகளில்
பச்சை நிற பலூனுடன்
பட்டாம் பூச்சியாக
படபடத்துக் கொண்டிருந்த
மழலையின் கண்களில்
வசந்த காலம்
சிவப்பு நிற பலூனுடன்
பட்டாம் பூச்சியாக
படபடத்துக் கொண்டிருந்த
மழலையின் கண்களில்
மழைக் காலம்...
பச்சை நிற பலூன் கேட்டு
பலூனின் நிறத்தில்
ஒன்றுமில்லை என
சிவப்பின் மகத்துவத்தை
சொல்லலானாள் தாய்
குழந்தைகள் கையில் பலூன்
பெரியவர்கள் கையில்...
கனவுகளும் வாழ்வின் தருணங்களும்!!!
8 comments:
//குழந்தைகள் கையில் பலூன்
பெரியவர்கள் கையில்...
கனவுகளும் வாழ்வின் தருணங்களும்!!! ///
supper ..!
//வசந்த காலம்
//மழைக் காலம்
சூப்பர் !!! அருமையான உவமை.
அடிக்கடி எழுதுங்கள்.
நல்லாருக்கு!
ஷிவ்கேராவின் புத்தகத்திலுள்ள ஒரு கதையையும் நினைவூட்டுகிறது இந்த கவிதை - பலூனின் நிறத்தில் ஒன்றுமில்லை, உள்ளே இருப்பதுதான் என்பதுபோல!
குழந்தைகள் கையில் பலூன்
பெரியவர்கள் கையில்...
கனவுகளும் வாழ்வின் தருணங்களும்!!!
யதார்த்தம் அமுதா.
//குழந்தைகள் கையில் பலூன்
பெரியவர்கள் கையில்...
கனவுகளும் வாழ்வின் தருணங்களும்!!!//
அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் அமுதா.
அழகான கவிதை :-)
//பட்டாம் பூச்சியாக
படபடத்துக் கொண்டிருந்த
மழலையின் கண்களில்
வசந்த காலம் //
இயல்பான உண்மை..
அருமையான கருத்து அமுதா :)
Post a Comment