என் மேகம் ???

Tuesday, August 2, 2011

இருக்குமா?

நினைவுகளின் வண்ணங்களைப்
பூசிச் சென்றது
வண்ணத்துப் பூச்சி ஒன்று

பால்யத்தின் சுவடுகளைப்
பாதுகாத்து இருக்குமா
புளியமரத்து நிழல்?

பதின்மத்தின் பதிவுகள்
பத்திரமாக இருக்குமா
பூந்தோட்டத்தில்?

இளமையின் துள்ளல்கள்
இன்றும் இருக்குமா
பச்சை புல்வெளியில்?

வாழ்வின் சாட்சியாக
வாழ்ந்திருக்குமா?
காலத்தின் மாற்றங்களில்
புதைந்து இருக்குமா?

6 comments:

அமைதிச்சாரல் said...

எல்லாமே இருக்கும் பசுமையா நினைவுகளில் :-)

அருமையாயிருக்கு கவிதை.

Chitra said...

very nice. :-)

ராமலக்ஷ்மி said...

இருக்குமா? தெரியாது.

ஆனால் இருக்குமா எனும் கேள்வி நான் இருக்கும் வரை இருக்கும்.

நல்ல கவிதை அமுதா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

புளியமரத்து நிழல் பாதுகாத்திருக்குமா ..ஹ்ம்.. எங்களுக்கு பதின்மத்தின் பதிவுகள் தான் அந்த நிழலில் :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

புளியமரத்து நிழல் பாதுகாத்திருக்குமா ..ஹ்ம்.. எங்களுக்கு பதின்மத்தின் பதிவுகள் தான் அந்த நிழலில் :))

ராமலக்ஷ்மி said...

'நாம்’* :)!