என் மேகம் ???

Tuesday, June 7, 2011

பலூன் வாழ்க்கை

காற்றால் நிரம்பிய
பலூன் ஒன்று
காற்றால் இழுக்கப்பட்டு
கைநழுவிச் செல்லும்

கண்கள் நிரம்பிட
தானே அடங்கும்வரை
அடம் தொடங்கும்
குழந்தையிடம்

காற்று காலமாக
பலூன் வாழ்க்கையாக
குழந்தை...
மனிதன் ஆனது

3 comments:

Unknown said...

காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பையடா

---------


ஏனோ இவை ஞாபகத்தில் வருகின்றது

ராமலக்ஷ்மி said...

//காற்று காலமாக
பலூன் வாழ்க்கையாக
குழந்தை...
மனிதன் ஆனது//

அருமை அமுதா. நல்ல கவிதை.

குணசேகரன்... said...

நல்லா அழகா எழுதியிருகீங்க..