என் மேகம் ???

Monday, April 4, 2011

சுமை

நத்தை கூட்டை
சுமப்பது போல்
எல்லோரும்
சுமந்து திரிந்தார்கள்

மூச்சு திணறியது
தொல்லைகள் ஏராளம்
தொலைத்தவை கணக்கில்லை
பயன்கள் ஏதுமில்லை

என்றாலும்...
விடாது சுமந்தனர்
குட்டையின் மட்டையாக
நானும் சுமந்தேன்....

ஓர் எல்லைக்கு மேல்
அது பாரமானது
இழப்பவை எல்லாம்
மூடம் என்றது மனம்

சுமப்பவர் எவருக்கும்
காணவும் நேரமில்லை
காலடியில் கிடக்கும்
அழகான தடங்களை....

மூச்சு முட்டியபொழுது
இறக்கி வைத்தேன்
புதுக் காற்று தழுவியது
புத்துணர்வு வந்தது

மனம் சிறகடித்தது
வெறுங்கூடென
தூக்கி எறிந்தேன்
தன்முனைப்பை...

சுமந்து கொள்வேன்
மீண்டும்
மன நிம்மதி
வேண்டாமெனில்...

5 comments:

Anonymous said...

எதையோ பறிக்கொடுத்த வலி துரத்திக் கொண்டிருக்க கவிதை கொஞ்சம் தட்டிக் கொடுத்த மாதிரி இருக்கு அமுதா...

ராமலக்ஷ்மி said...

அருமை அமுதா.

//சுமப்பவர் எவருக்கும்
காணவும் நேரமில்லை
காலடியில் கிடக்கும்
அழகான தடங்களை....//

உண்மை. நல்ல கவிதை.

Chitra said...

சுமப்பவர் எவருக்கும்
காணவும் நேரமில்லை
காலடியில் கிடக்கும்
அழகான தடங்களை....


.... absolutely true.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தன்முனைப்பை தூக்கிப்போட வாவ்..

சுமப்பவர்களூக்கு அதை கவனிக்க நேரமில்லை தான்.

ஆமா ..நிஜம்மாவே தூக்கிப்போடமுடியுதா..:)

அன்புடன் நான் said...

கவிதை சிறப்பு