நிறைந்து வழியும்
பேருந்தில்
பத்திரமாகப் பயணிக்கும்
மீதிச் சில்லறைகள்...
குட்டிப்பெண்
சொகுசாகப் பயணித்தாலும்
காசு வாங்காத
ஷேர் ஆட்டோ....
பெரிய குழந்தையை
மடியில் இருத்தி
இடமளிக்கும்
இரயில் பயணம்...
கண்ணாடி கடிகாரமென
நொடியில் சரிசெய்தாலும்
கட்டணம் வசூலிக்காத
சின்ன கடைகளின்
பரந்த மனம்....
அவ்வப்பொழுது
தூறும் சாரலில்
குளிர்ந்து செல்லும்
வாழ்க்கைப் பயணம்...
6 comments:
அருமை ..!
//கண்ணாடி கடிகாரமென
நொடியில் சரிசெய்தாலும்
கட்டணம் வசூலிக்காத
சின்ன கடைகளின்
பரந்த மனம்....//
ஆமாம் என்ன செய்வது எனத் தெரியாம வருவோம்.
சாரல் யாவும் சிலிர்க்க வைக்கும் தூறலாய் அருமை அமுதா.
azhagu!
\\சாரல் யாவும் சிலிர்க்க வைக்கும் தூறலாய் அருமை அமுதா.\\
:-)))
//அவ்வப்பொழுது
தூறும் சாரலில்//
இந்தச் சாரல்தான் பெருமழையையும் கொண்டுவரும்னு நம்பிக்கை தருது!!
Lovely!
Life's beautiful moments captured.
Post a Comment