என் மேகம் ???

Tuesday, February 23, 2010

உடை சுதந்திரம்

காற்றை ஆடையாக்கி
துள்ளித் திரியும்
குழந்தை அவள்

பொம்மைகளுக்கு
உடை உடுத்தி
சிரித்திருப்பாள்

குழந்தையென்றாலும்
ஒரு நாள்...
ஆடை கட்டாயமானது

சின்னப்பெண்ணிடம்
யாசித்து நிற்கின்றன
ஆடை களைந்த பொம்மைகள்

பொம்மைகளேனும்
இருக்கட்டும் ஃப்ரீயாக
என்கிறாள் குழந்தை

கோபம் கொள்கிறாள் தாய்...
ஆப்பிள் உண்ட
ஏவாளின் மீது

11 comments:

அண்ணாமலையான் said...

very very beautiful... congrats

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகாகா..

\\சின்னப்பெண்ணிடம்
யாசித்து நிற்கின்றன
ஆடை களைந்த பொம்மைகள்//
அதையும் மிரட்டி வச்சிட்டாங்களா...:(

அகல்விளக்கு said...

அருமை....

மதுரை சரவணன் said...

ஏவாள் மீது கோபம் நியாயமானதே! அருமை. வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

கடைசி வரி ‘நச்’

ராமலக்ஷ்மி said...

உடை சுதந்திரம் பற்றி ஊரெல்லாம் பேச்சாய் இருக்க உங்கள் கோணம் வித்தியாசமே.

அமிர்தவர்ஷினி அம்மா said...

உடை சுதந்திரம் // தலைப்பை பார்த்தவுடன் பெரிய பதிவா இருக்கும்னு நினைச்சேன் ;)))))

சின்னப்பெண்ணிடம்
யாசித்து நிற்கின்றன
ஆடை களைந்த பொம்மைகள்

பொம்மைகளேனும்
இருக்கட்டும் ஃப்ரீயாக
என்கிறாள் குழந்தை

யதார்த்தம் // எல்லாவற்றையும் விட்டு விலகி களைந்து நிற்கத்தான் தோன்றுகிறது. ஆனால்????

கடைசி வரி படித்தவுடன் எனக்கும் ஏவாள் மேல கோவம் வருது.

சந்தனமுல்லை said...

ஹஹ்ஹா...ரசித்தேன்!

"உழவன்" "Uzhavan" said...

நல்லாருக்கு மேடம்

நர்சிம் said...

உடையும் உடை?

Anonymous said...

எதார்த்தம் கவிதையாகி இருக்கு நல்லாயிருக்கு அமுதா.....