என் மேகம் ???

Wednesday, February 10, 2010

நினைவு அஞ்சலி

படிக்கப்படாத புத்தகங்கள்
புரட்டிக் கொண்டே இருக்கின்றன
மனதின் பக்கங்களை...

தோட்டத்துச் செடிகள்
பரப்பிக் கொண்டே இருக்கின்றன
நினைவுகளின் வாசத்தை...

வீட்டுச் சுவர்கள்
விளம்பிக் கொண்டே இருக்கின்றன
ஏதேனும் ஒரு நினைவை...

நாட்காட்டி தாள்கள்
உதிர்ந்து சுட்டிக்காட்டும்
நாள் மட்டுமா
நினைவு அஞ்சலி?


உருண்டோடி விட்டன இரு வருடங்கள் மாமா மறைந்து... கடைசியாக தொலைபேசியில் தான் பேசினேன். அப்பாவின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. அப்பொழுது குழந்தைகளைப் பெற்றோர் உதவியுடன் கவனித்துக் கொண்டிருந்தேன். மாமா குழந்தைகளைக் கவனிக்க வரட்டுமா என்றார். ஊர் விட்டு ஊர் அலைய வைக்க வேண்டாம் என்று, நான் சமாளித்துக் கொள்வேன் என்றேன். அப்பொழுதும் விடவில்லை , "அப்பாவால் சாமானெல்லாம் வாங்கிப் போட முடியாதில்லையா... நான் வந்து பார்க்கிறேன்" என்றார். "இல்லை மாமா நீங்கள் அலைய வேண்டாம் நாங்கள் சமாளித்துக் கொள்வோம்" என்றேன். இப்பொழுது நினைத்தாலும் அந்த அன்பில் மனம் நெகிழும்.

12 comments:

ராமலக்ஷ்மி said...

//நாட்காட்டி தாள்கள்
உதிர்ந்து சுட்டிக்காட்டும்
நாள் மட்டுமா
நினைவு அஞ்சலி?//

உண்மைதான் அமுதா. சரியாகச் சொன்னீர்கள். உங்கள் மாமாவின் நினைவுகள் மட்டுமல்ல அவரின் ஆசிகளும் எப்போதும் உங்களுடன் இருக்கும்!

pudugaithendral said...

ஞாபகப்படுத்திட்டீங்களே!!

எங்க மாமா மறைந்து ஒரு வருடம் ஆகப்போகிறது.
:(( நீங்காத நினைவுகளுடன் நாங்கள்.

sathishsangkavi.blogspot.com said...

//நாட்காட்டி தாள்கள்
உதிர்ந்து சுட்டிக்காட்டும்
நாள் மட்டுமா
நினைவு அஞ்சலி?//

உண்மைதான்....

சந்தனமுல்லை said...

:-(

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்!

அண்ணாமலையான் said...

எல்லா நாளுமெ நல்லவர்கள் நினைப்பு வந்து கொண்டே தான் இருக்கும்

பின்னோக்கி said...

உண்மையான அஞ்சலி. வருத்தங்கள்.

தமிழ் said...

:-(

ஆழ்ந்த அஞ்சலிகள்

மாதவராஜ் said...

அஞ்சலிகள்!

அகஆழ் said...

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்...

//தோட்டத்துச் செடிகள்
பரப்பிக் கொண்டே இருக்கின்றன
நினைவுகளின் வாசத்தை...//

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது காலமான என் பாட்டியை நினைவு படுத்துகிறது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

//நாட்காட்டி தாள்கள்
உதிர்ந்து சுட்டிக்காட்டும்
நாள் மட்டுமா
நினைவு அஞ்சலி?//

சில நிகழ்வுகளாலும், நினைவுகளாலும் அவர்களை நித்தமும் மீட்டெடுக்கிறோம்.

ஆழ்ந்த அஞ்சலிகள்

நட்புடன் ஜமால் said...

நெகிழ்வாய் ...

நாட்காட்டி தாள்கள் :(

அம்பிகா said...

//நாட்காட்டி தாள்கள்
உதிர்ந்து சுட்டிக்காட்டும்
நாள் மட்டுமா
நினைவு அஞ்சலி?//

உண்மைதான்.

:-(

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்!