என் மேகம் ???

Wednesday, August 12, 2009

கெட் மீ த ஃப்ளோரா பவர்




குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஏதேதோ விளையாட்டுக்கள்... பேச்சுக்கள்...சின்ன சின்ன சண்டைகள்... சுவாரசியமாக இருந்தது. தொலைக்காட்சியில் ஃப்ளோரா பென்சில் பற்றிய விளம்பரம் வந்தது. குட்டிப் பெண் கூறுகிறாள் :

"நானும் என் ஃபிரண்ட்ஸும், கெட் மீ த ஃப்ளோரா பவர்-னு சொன்னோம், ஆனால் பார்பி வரலை".
"எதுக்கு கூப்பிட்டீங்க"
"எழுதறது கஷ்டமா இருந்தது அதான்"
"ஓ... கிவ் மீ த ஃப்ளோரா பவர் சொன்னால் பார்பிஸ் வரமாட்டாங்களா?"
"அதெல்லாம் உண்மை கிடையாது அம்மா... பொய்"


ஒரு கணம் அவை உண்மையாக இருந்திருக்கக் கூடாதா என்று தோன்றியது. மாயாஜாலக் கதைகள் இனிமையானவை. கற்பனை வளத்தைத் தூண்டிவிடுவதோடு ஒரு அழகான உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும். அங்கு கெட்டவரைத் தேடி நல்லவர்கள் செல்வார்கள். நாமும் அந்த நல்லவருள் ஒருவராவோம். தேவதைகளுடன் விளையாடுவோம், அவர்கள் நமக்கு உதவுவார்கள் அல்லது நாம் அவர்களுக்கு உதவுவுவோம், நிலவில் கால் வைப்போம், மேகத்தில் மிதப்போம், நட்சத்திரங்களிடம் சக்தி தேடுவோம், தங்க நதிகளும், வெள்ளி ஓடைகளும் குறுக்கிடும், விலங்குகள் நட்புடன் உதவும், தாவரங்கள் பேசும் ... இன்னும் பல அதிசயங்கள் நம் முன் மலரும்.



இன்றும் விக்ரமாதித்யன் கதைகளும், மதன காமராஜன் கதைகளும், பஞ்ச தந்திர கதைகளும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன. சிறுவர்மலர் தொடர் கதைகளும், தங்கப் புதையல் போன்ற படக்கதைகளும் நினைவிற்கு வந்து மனதில் ஒரு ஏக்கம் உருவாக்குகின்றன.

சமீபத்தில் என்னை மிகவும் ஈர்த்தது ஹாரி பாட்டர் கதைகள். அந்த கதையின் கரு மிகவும் பிடித்தது. ஹாரி பாட்டர் "இருள் அரசன்" வால்டிமார்ட்டைக் அழிக்கப் பிறப்பான். இருவரும் கிட்டதட்ட ஒரே சக்தியை உடையவர்கள். ஹாரியை வால்டிமார்ட்டிடம் இருந்து ஒன்று தான் வேறுபடுத்தும். அது... அன்பு....




அதில் வரும் ஒரு உருவகம் "டெமெண்ட்டர்". "டெமெண்ட்டர்" நம் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் உறிஞ்சி நம்மைப் பைத்தியமாக்கும் வல்லமை உடையவை. நம்மைச் சுற்றி சில "டெமண்ட்டர்கள்" உண்டு என்பதை நாம் மறுக்க முடியாது. டெமெண்ட்டர்ஸை எதிர்க்கும் மாயம் "மகிழ்ச்சி, நம்பிக்கை, பாஸிடிவ் மனம்" போன்றவற்றை உருவாக்கும் மந்திரமே. அழகான கருத்து.

மற்றொரு உருவகம் "ரூம் ஆஃப் ரிக்கொயர்மெண்ட்ஸ்" - தேவைகளுக்கான அறை. மறைந்து நிற்கும் அவ்வறையின் வாயிலில் நாம் என்ன வேண்டும் என்று எண்ணுகிறோமோ, அதுவாக அந்த அறை நமக்கு முன் திறக்கும். "நினைப்பது தான் நடக்கும்" என்ற கருத்தைப் போல.

இப்படி மாயா உலகில் சில நனவுலகமும் மிகைப்படுத்தப்பட்டு வரும். நூலகம் சென்றால் இப்பொழுது எனக்கு ஓரளவுக்கு நந்தினிக்கு ஆங்கிலப் புத்தகங்கள் தேர்வு செய்ய இயல்கின்றது. "Daisy Meadows" தேவதைகளும், "Secrets of Droon" மாய உலகும், "goosebumps" திகில் உலகமும் அவள்முன் மாயாஜாலங்கள் செய்கின்றன. இவை எனக்கு அறிமுகமில்லாத புத்தகங்கள். நந்தினிக்கான தேடலில் கிடைத்தவை. தமிழ் அவளுக்கு பிடிக்கும் என்றாலும், எழுத்துத் தமிழில் கதைகள் படிக்க சிறிது சிரமப்படுகிறாள். மெல்ல மெல்ல அவளே வாசிக்க விருப்பப்படுவாள் என்று நம்பிக்கை உள்ளது.

வாசிப்பு இப்பொழுது அவளது கற்பனை வளத்தைத் தூண்டுகின்றது. இப்பொழுது அவள் நிறைய மாயாஜாலக் கதைகள் எழுதுகிறாள். பிடித்த நீதிகள் கூறும் கதை எழுதுகிறாள். அவை எனக்கு மிகவும் பிடிக்கின்றன. அவற்றை அவள் ப்ளாக்கில் போடத் தான் எனக்கு நேரமில்லை.

ம்... நினைத்துப்பார்த்தால் கையில் அடங்கிய சின்னக் குழந்தை , கதை கேட்டு வளர்ந்த குட்டிப் பெண் இன்று தோள் வரை வளர்ந்து கதை சொல்வதே காலத்தின் மாயாஜாலமாகத் தான் தெரிகிறது.

"கெட் மீ த ஃப்ளோரா பவர்", இவ்வுலகில் எல்லா குழந்தைகளும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து பால்யத்தை அனுபவிக்க....

17 comments:

நட்புடன் ஜமால் said...

ம்... நினைத்துப்பார்த்தால் கையில் அடங்கிய சின்னக் குழந்தை , கதை கேட்டு வளர்ந்த குட்டிப் பெண் இன்று தோள் வரை வளர்ந்து கதை சொல்வதே காலத்தின் மாயாஜாலமாகத் தான் தெரிகிறது.]]

சந்தோஷ நேரங்கள் ...

Dhiyana said...

அருமை அமுதா. என் பாட்டி விக்கிர‌மாதித்ய‌ன் க‌தைக‌ள் சொல்லிவிட்டு, விடை சொல்ல‌ மாட்டார்க‌ள். ம‌றுநாள் நான் க‌ண்டுபிடித்‌து ஏதோ விடை சொன்னால்,ச‌ரியான‌ விடைக‌ளைச் சொல்லுவார்க‌ள். அத‌ற்குள் என‌க்குத் தலை வெடித்து விடும் போல் இருக்கும். ந‌ல்ல‌தொரு ப‌திவு

Raju said...

முல்லா கதைகளும், மரியாதை , தெனாலி ராமன் கதைகளும் சுவாரஸியம்தான்.

சந்தனமுல்லை said...

ஆமா..அமுதா...இந்தத் திகில் கதையெல்லாம் படிக்காம இருகக்வும் முடியாது..படிச்சுட்டு பயந்துக்கிட்டு இருந்த நாட்கள் நினைவுக்கு வருது...அதுவும் ராத்திரிலே முழுச்சுக்கும்போதுதான் சரியா ஞாபகத்துக்கு வந்துத் தொலைக்கும்!! :-))

அமிர்தவர்ஷினி அம்மா said...

மற்றொரு உருவகம் "ரூம் ஆஃப் ரிக்கொயர்மெண்ட்ஸ்" - தேவைகளுக்கான அறை. மறைந்து நிற்கும் அவ்வறையின் வாயிலில் நாம் என்ன வேண்டும் என்று எண்ணுகிறோமோ, அதுவாக அந்த அறை நமக்கு முன் திறக்கும். "நினைப்பது தான் நடக்கும்" என்ற கருத்தைப் போல. //

அழகான பதிவு அமுதா.

"கெட் மீ த ஃப்ளோரா பவர்", இவ்வுலகில் எல்லா குழந்தைகளும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து பால்யத்தை அனுபவிக்க....

:))))))) அம்மா டச்

ராமலக்ஷ்மி said...

இந்திரஜால காமிக்ஸ், முத்து காமிக்ஸ், அம்புலிமாமா, பாலமித்ராக்களில் மூழ்கிக் கிடந்த காலத்தை நினைவூட்டி விட்டீர்கள்.

//அவள் நிறைய மாயாஜாலக் கதைகள் எழுதுகிறாள். பிடித்த நீதிகள் கூறும் கதை எழுதுகிறாள்.//

என் நல்வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்!

G3 said...

//"கெட் மீ த ஃப்ளோரா பவர்", இவ்வுலகில் எல்லா குழந்தைகளும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து பால்யத்தை அனுபவிக்க....//

Choooooooo chweeeeeeeeeet :)))

G3 said...

//"கெட் மீ த ஃப்ளோரா பவர்", இவ்வுலகில் எல்லா குழந்தைகளும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து பால்யத்தை அனுபவிக்க....//

Choooooooo chweeeeeeeeeet :)))

butterfly Surya said...

அருமை அமுதா.

குழந்தையாய் மாறிவிட்டால் இல்லை ஒரு தொல்லை என்ற கவியரசரின் வரிகள் நினைவிற்கு வருகின்றன.

நான் சிறு வயதில் படித்து என்னை மெருகேற்றிய அம்புலிமாமா , பாலமித்ரா, தெனாலி ராமன் கதைகள், முத்து, ராணி மற்றும் லயன் காமிக்ஸ்” போன்ற புத்தகங்கள் இந்த தலைமுறைக்கு அன்னியமாக வே இருக்கிறது.அதுவும் தமிழில் படிக்கவும் புரிந்து கொள்ளவும் அவர்களால் முடிகிறதா என்பதே சந்தேகம்.


தமிழகத்தில் எல்லா குழந்தைகளும் அழுது வடியும் சீரியல்களையும் சினிமா, போட்டிகள் என்ற பெயரில் ஆபாச நடனங்களையும் அருவருக்கதக்க நிகழ்வுகளையும்
நடு ஹாலில் உட்கார்ந்து மணிகணக்கில் பார்ப்பது என்பது கொடுமையிலும் கொடுமை.

குழந்தைகளிடம் வாசிப்பு அனுபவம் இன்னும் நிறைய நிறைய வளர வேண்டும் என்பதே என் அவா.

பகிர்விற்கு நன்றி.

ஆயில்யன் said...

விக்கிரமாதித்தியன் போட்டோ பார்த்ததுமே டக்குன்னு தோணுச்சு

//ராமலக்ஷ்மி said...

இந்திரஜால காமிக்ஸ், முத்து காமிக்ஸ், அம்புலிமாமா, பாலமித்ராக்களில் மூழ்கிக் கிடந்த காலத்தை நினைவூட்டி விட்டீர்கள்.//

அக்கா சொல்லிட்டாங்க :)))

ஆயில்யன் said...

//G3 said...

//"கெட் மீ த ஃப்ளோரா பவர்", இவ்வுலகில் எல்லா குழந்தைகளும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து பால்யத்தை அனுபவிக்க....//

Choooooooo chweeeeeeeeeet :)))//


பாஸ் ஏனிந்த எக்ஸ்ட்ரா சவுண்ட்டு !

ஹேமா said...

அமுதா,அருமையான நினவலைகள்.எனக்காக என் அப்பா அம்புலிமாமா புத்தகங்கள் சேகரித்து வைத்திருந்தார்.

அ.மு.செய்யது said...

வித்தியாசமான பதிவு அமுதா.அம்புலிமாமாவை விட‌ என‌க்கு பூந்த‌ளிர் இத‌ழ் ரொம்ப‌ பிடிக்கும்.

முற்றிலும் குழந்தைகள் உலகமென அசத்தியிருக்கிறீர்கள்.தொடர்ந்து இது போன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.

அமுதா said...

நன்றி ஜமால்
நன்றி யாசவி
நன்றி தீஷு
நன்றி டக்ளஸ் /*டக்ளஸ்... said...
முல்லா கதைகளும், மரியாதை , தெனாலி ராமன் கதைகளும் சுவாரஸியம்தான்.
*/ - ஆமாம்.மாயாஜாலம் பற்றி பேசியதால் அவற்றைக் கூறவில்லை.

அமுதா said...

நன்றி முல்லை /*சந்தனமுல்லை said...
...அதுவும் ராத்திரிலே முழுச்சுக்கும்போதுதான் சரியா ஞாபகத்துக்கு வந்துத் தொலைக்கும்!! :-))
*/
:-))

நன்றி அமித்து அம்மா

/*ராமலஷ்மி said ... என் நல்வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்!*/
நன்றி ராமலஷ்மி மேடம். கண்டிப்பா சொல்றேன்.


/*G3 said...
Choooooooo chweeeeeeeeeet :)))*/
CHO CHWEET :-))நன்றி g3

அமுதா said...

நன்றி சூர்யா /*வண்ணத்துபூச்சியார் said... குழந்தைகளிடம் வாசிப்பு அனுபவம் இன்னும் நிறைய நிறைய வளர வேண்டும் என்பதே என் அவா. */ நானும் ஆமோதிக்கிறேன்

நன்றி ஆயில்யன்

நன்றி ஹேமா

நன்றி செய்யது

"உழவன்" "Uzhavan" said...

//வாசிப்பு இப்பொழுது அவளது கற்பனை வளத்தைத் தூண்டுகின்றது. இப்பொழுது அவள் நிறைய மாயாஜாலக் கதைகள் எழுதுகிறாள். பிடித்த நீதிகள் கூறும் கதை எழுதுகிறாள்.//
 
கலக்கல்.. வாழ்த்துக்கள் :-)